புரட்டாசி மாத பூஜை: சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு

சபரிமலையில் தங்கும் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
புரட்டாசி மாத பூஜை: சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு
Published on

திருவனந்தபுரம்,

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை ) முதல் 21-ந் தேதி வரை மாத பூஜையை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நிறைவேற்றுவார்.

இந்த நாட்களில் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். புரட்டாசி மாத பூஜைக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் சபரிமலையில் தங்கும் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com