

திருப்பதி,
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூயிருப்பதாவது:-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி வரை 3 நாட்கள் ராமநவமி உற்சவங்கள் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை மூலவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்ச நேயருக்கும். உற்சவர்களுக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 3 மணியளவில் ராமநவமி ஆஸ்தானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு உற்சவர் கோதண்டராமர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
நாளை (சனிக்கிழமை) காலை சீதா, லட்சுமணர் சமேத கோதண்டராமருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை முத்துமாலையை யானை மீது வைத்து ஊர்வலம் நடத்தப்படுகிறது. மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருப்பதியில் அமைந் துள்ள நரசிம்ம தீர்த்தத்தில் இருந்து புனித நீர் எடுக்கப்பட்டு, ஊர்வலமாக கோவிலுக்குக் கொண்டு வரப்படுகிறது. அந்தப் புனித நீரால் மூலவர், உற் சவர்களுக்கு சதுர்தச கலச ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இரவு 7 மணியில் இருந்து 8.30 மணி வரை ராமர் பட்டாபிஷேக வைபவம் நடக் கிறது. அதன்பிறகு உற்சவர்கள் தங்கத் திருச்சி வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.