அயோத்தி ராமர் கோவிலில் ராம நவமி விழா தொடங்கியது

ராம நவமி தினமான நாளை, காலை முதல் ஸ்ரீராமருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது.
ராம நவமி விழா கொடியேற்றம்
ராம நவமி விழா கொடியேற்றம்
Published on

அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் இந்த ஆண்டு ராம நவமி விழாவை விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி விழாவின் தொடக்கமாக, இன்று ராமர் கோவிலில், அனைத்து வேத சடங்குகளையும் பின்பற்றி கொடியேற்றம் (துவஜாரோஹணம்) நடைபெற்றது. காவி நிறத்திலான இக்கொடியில் 'ஓம்' சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. 19 அடி 7 அங்குல உயரமுள்ள கொடிமரத்தில் இக்கொடி ஏற்றப்பட்டுள்ளது; இக்கொடியானது 9 அடி 3 அங்குல நீளமும், 4 அடி 7 அங்குல அகலமும் கொண்டது.

பால ராமர்
பால ராமர்

ராம நவமி தினமான நாளை காலை முதல் ஸ்ரீராமருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் பால ராமரை தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

ராம நவமியை முன்னிட்டு சூரியனின் கதிர்களை மூலவர் பால ராமரின் நெற்றியில் ஒளிரச் செய்யும் காட்சி நடைபெறும். இது சூரிய திலகம் வழிபாடு எனப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com