திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழா: சூரிய பிரபை வாகன சேவை


திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழா: சூரிய பிரபை வாகன சேவை
x

உற்சவர் வைத்திய வீரராகவப் பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவள்ளூர்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் தை மாதம் வளர்பிறை 7-ம் நாள் வரும் சப்தமி தியில் ரத சப்தமி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த தினம் சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகின்றது. இந்த ரத சப்தமி தினத்தையொட்டி நடைபெறும் சூரிய பிரபை வாகன சேவையின்போது பகவானை தரிசனம் செய்தால் நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுளும், நிறைவான செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அவ்வகையில் இந்த ஆண்டு ரத சப்தமி விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி காலையில் உற்சவர் வைத்திய வீரராகவப் பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story