

திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்திலும் 5 நாட்கள் வழிபாடு நடைபெறுவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் சபரிமலையில், மாத பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பங்குனி மாத பூஜையை முன்னிட்டு, சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி மாத பூஜைகளுக்கு பின், கோவிலின் வருடாந்திர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.