சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலையில் மார்ச் 23ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
Published on

சபரிமலை,

தமிழ் மாதம் பங்குனி, மலையாள மாதமான மீனத்தின் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.

மாதாந்திர பூஜைகள் நிறைவடைந்த பிறகு மார்ச் 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை நடை மீண்டும் அடைக்கப்படும். தொடர்ந்து, சபரிமலையில் மார்ச் 23ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடத்தப்படும். பக்தர்கள் தரிசனத்திற்கு sabarimala.org.in, தங்கும் அறைகள் முன்பதிவுக்கு www.onlinetdb.com அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com