சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

நாளை பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிறது.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
Published on

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில், பங்குனி மாத பூஜையை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பிர சாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். பின்னர் இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டது.

தொடர்ந்து 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் சபரிமலையில், மாத பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர் மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷ பூஜை, நெய் அபிஷேகம், களப பூஜை. கலசாபி ஷேகம் உச்ச பூஜை புஷ்பாபிஷேகம், படி பூஜை உள்பட சிறப்பு பூஜை வழிபாடுகள் நடை பெறும், மாத பூஜை நாட்களில் தினசரி இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

பங்குனி மாத பூஜைகளுக்கு பின், கோவிலின் வருடாந்திர பங்குனி ஆராட்டு திருவிழா நாளை (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கொடியை ஏற்றி வைக்க உள்ளார். முன்னதாக இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் திருவி ழாவையொட்டி 31-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும்.

ஏப்ரல் 1-ந் தேதி பம்பையில் நடைபெறும் ஆராட்டு சடங்குகளுக்கு பின் அன்றைய தினம் மாலையில் திருவிழா கொடி இறக்கப்படும். விழா நாட்களில் தினமும் உச்ச பூஜைக்கு பின் உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com