

திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தில் உலகப்புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் நடை மாதம் தோறும் மாதாந்திர பூஜைகளுக்காக திறக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், மலையாள புத்தாண்டு நாளை மறுதினம் பிறக்க உள்ளது. அதன்படி, மலையாள நாட்காட்டியின் முதல் மாதமான சிங்கம் நாளை மறுதினம் பிறக்கிறது. இதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மறுதினம் (16ம் தேதி) திறக்கப்படுகிறது. முதல் நாள் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
அதன்பின்னர், 17ம் தேதி காலை 5 மணி முதல் 21ம் தேதி இரவு 10 மணி வரை கோவில் நடை திறக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இதையடுத்து நடை அடைக்கப்படுகிறது.
இதையடுத்து, ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் 24ம் தேதி திறக்கப்படுகிறது. பின்னர் கோவில் நடை மீண்டும் 28ம் தேதி இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது என்று சபரிமலை தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. பக்தர்கள் தரிசன வசதிக்காக தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளதாகவும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.