சபரிமலையில் தினமும் 90 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு - தேவசம்போர்டு தகவல்


சபரிமலையில் தினமும் 90 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு - தேவசம்போர்டு தகவல்
x
தினத்தந்தி 29 Oct 2025 8:59 PM IST (Updated: 29 Oct 2025 9:01 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டு சபரிலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் 90 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம் என்றும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேசம்போர்டு தெரிவித்துள்ளது. இதன்படி வரும் நவம்பர் 1-ந்தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்கும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

1 More update

Next Story