ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சனீஸ்வரர் ஜெயந்தி விழா

சனீஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சனீஸ்வரர் ஜெயந்தி விழா
Published on

ஸ்ரீகாளஹஸ்தி,

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று சனீஸ்வரர் ஜெயந்தி விழா நடந்தது. அதையொட்டி சனீஸ்வரர் சன்னதியில் கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்து சிறப்புப் பூஜைகள் நடத்தினர்.

தொடர்ந்து சனீஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், இளநீர், தேன், நல்லெண்ணெய் போன்றவற்றால் அபிஷேகம் செய்தனர். தீப, தூப, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி எம்.எல்.ஏ. பொஜ்ஜல.சுதீர்ரெட்டி தம்பதியர், பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com