திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா.. பக்தர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு

தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் தேவஸ்தானம் அங்கீகரித்த கவுண்ட்டர்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான்
திருநள்ளாறு சனீஸ்வர பகவான்
Published on

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தில் தனிசன்னதியில் ஸ்ரீசனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்​கிய பஞ்​சாங்​க முறைப்படி சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதில் பங்​கேற்க நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்​தும் லட்​சக்கணக்கான பக்​தர்​கள் கோவிலுக்கு வருகை தருவார்​கள்.

அவ்வகையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. அன்றைய தினம், காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். சனிப்பெயர்ச்சி நேரத்தை கணக்கிட்டு, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனைகள் நடைபெற உள்ளன.

பக்தர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்ய, தேவஸ்தான நிர்வாகம் இலவச தரிசனம் மற்றும் 3 வகையான கட்டண தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இலவச தரிசன வரிசை மற்றும் ரூ.300, ரூ.600. ரூ.1,000 என கட்டணம் செலுத்தும் சிறப்பு தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து டிக்கெட்களும் தேவஸ்தானம் அங்கீகரித்த கவுண்ட்டர்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

டிக்கெட், பாஸ் போன்ற அனைத்திலும் தேவஸ்தான 'ஹாலோகிராம்' ஒட்டப்பட்டிருக்கும் என்பதால், பக்தர்கள் போலி டிக்கெட்டுகளை தவிர்த்து உண்மையான டிக்கெட்டுகளை மட்டுமே பெறமுடியும். பக்தர்கள் சிரமமின்றி டிக்கெட்டுகள் பெறுவதற்காக, 15 இடங்களில் டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சனிப்பெயர்ச்சி நாட்களில் அதிக வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க, அனைத்து வரிசைகளிலும் தகர கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் நிற்க வேண்டி உள்ளதால், வரிசைகளில் உட்கார்ந்து செல்லும் வசதியும் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தாய்மார்களுக்கு பிரத்யேக தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளி பக்தர்களுக்கு தனிப்பட்ட வழித்தடங்கள் மற்றும் சிறப்பு தரிசன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வரிசையில் நிற்கும்போது பயன்படுத்தும் கழிவறை வசதிகளும் போதுமான அளவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Also Read
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம்
திருநள்ளாறு சனீஸ்வர பகவான்

அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு, அண்டை மாநில போக்குவரத்து துறையினருடன் இணைந்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக, தனிப்பட்ட வாகன நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் அதிகம் குவியும் முக்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு தற்காலிக குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்கும் நோக்குடன், வரிசைகள் ஆரம்பிக்கும் இடங்கள், தரிசனம் முடிந்த பின் பக்தர்கள் வெளியேறும் பகுதிகள், பக்தர்கள் அதிகம் நடந்து செல்லும் வழித்தடங்கள் ஆகியவற்றில் அன்னதான மண்டபங்கள் அமைக்கப்பட்டு, இலவச அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நளன் குளத்தில் அனைத்து பக்தர்களும் சவுகரியமாக நீராடும் வகையில், குளம் முழுமையாக சீரமைக்கப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது. பெண் பக்தர்களுக்காக தனித்தனியாக உடை மாற்றும் அறைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

Also Read
வேண்டுதலை நிறைவேற்றும் ‘வேல்மாறல் மகா மந்திரம்’
திருநள்ளாறு சனீஸ்வர பகவான்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com