திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அடுத்த ஆண்டு மார்ச் 6-ந்தேதி சனிப்பெயர்ச்சி


திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அடுத்த ஆண்டு மார்ச் 6-ந்தேதி சனிப்பெயர்ச்சி
x

கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்கிறார்.

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கிலும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வாக்கிய பஞ்சாங்கப்படி, திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் 6-ந்தேதி காலை 8.24 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த தகவலை தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கம் வாசித்து அறிவித்தனர்.

மேலும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (மே) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூன் 6-ந்தேதி தேரோட்டம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story