பல்லடம் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு

விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பல்லடம் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
Published on

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பல்லடம் வட்டாரத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்லடம் பொன்காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், வடுகபாளையம் சக்தி விநாயகர் கோவில், சந்தைபேட்டை கோட்டை விநாயகர்,மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவில், உள்ளிட்ட கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சங்கடஹர சதுர்த்தி பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப்பெருமானை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

வெள்ளகோவில்

வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி புற்றுக்கண் ஆனந்த விநாயகருக்கு தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலர், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கிருத்திகையையொட்டி பாலமுருகனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com