செங்கோட்டை நித்திய கல்யாணியம்மன் கோவில் சப்பர வீதி உலா


செங்கோட்டை நித்திய கல்யாணியம்மன் கோவில் சப்பர வீதி உலா
x

மண்டகப்படிதாரர்கள் மூலம் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தென்காசி

செங்கோட்டையில் உள்ள நித்தியகல்யாணி அம்மன் கோவிலில் கடந்த 20ம் தேதி காலை 9.00 மணிக்கு ஹோமம் அதனைத் தொடர்ந்து 10.35 மணிக்கு மைல் கால்நாட்டு விழா, காப்புகட்டு வைபவத்துடன் கொடை விழா தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் மாலை 6.30 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. மண்டகப்படிதாரர்கள் மூலம் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பரவீதி உலா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story