செங்கோட்டை சிவன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்


செங்கோட்டை சிவன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்
x

விழா நாட்களில் சுவாமி-அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

தென்காசி

செங்கோட்டையில் உள்ள தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதசுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடத்தபடுவது வழக்கம். அவ்வகையில் நடப்பாண்டு தைப்பூச திருவிழா இன்று தொடங்கியது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், 5.20 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 5.00 மணிக்கு ஆவாஹன ஸ்ரீபலி விழா தொடங்குகிறது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டு பக்கதர்களுக்கு அருள் பிரசாதங்கள் வழங்கப்படும். இரவு 9.00 மணிக்கு சுவாமி - அம்பாள் ஏக சிம்மாசன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

இதேபோல் விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 31ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 6.00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. காலை 9.05 மணிக்கு மேல் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுக்க உள்ளனர். மதியம் 2 தேர், 1 கோரதம் என 3 தேர்களும் நிலையம் வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேரோட்டத்தைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் மற்றும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. பிப்ரவரி 2-ம் தேதி விழா நிறைவுபெறுகிறது.

1 More update

Next Story