

சோழவந்தான்,
மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திங்கட்கிழமை அன்று திருவிழா கொடியேற்றம் நடைபெறும். அதன்பின் மகாபாரத கதைக்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடமணிந்து அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடத்தப்படும்.
இதே போல் இந்த ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் வருகிற 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதிலிருந்து 12 நாட்கள் திருவிழா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், முகூர்த்தக்கால் கம்பத்தை மேளதாளத்துடன் எடுத்து வந்து வெளியே பூஜை செய்து நட்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல 28ஆம் தேதி துரியோதனன் படுகளம், திரௌபதி வேடம்புரிந்து அம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. 29ஆம் தேதி மாலை பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.