சோழவந்தான் அருகே மூலநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழா: பஞ்ச மூர்த்திகள் வீதி உலா

சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி நந்தி வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர்.
பஞ்சமூர்த்திகள் வீதி உலா
பஞ்சமூர்த்திகள் வீதி உலா
Published on

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அயன் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்தல், புண்யாஹவாசனம், விக்னேஸ்வர பூஜையைத் தொடர்ந்து திருவாசகம் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது.

நேற்று மாலை பஞ்சமூர்த்திகள் வீதிஉலா விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி நந்தி வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும், விநாயகர் முருகன் முன் செல்ல, சண்டிகேஸ்வரர் தொடர்ந்து பின் செல்ல, அதிர்வேட்டுக்கள் மேளதாளம் முழங்க பஞ்சமூர்த்திகள் திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com