சித்திரை மாதத்தில் இறைவனை குளிர்விக்கும் சிறப்பு வழிபாடுகள்

வேலூரில் சித்திரை மாத பௌர்ணமி அன்று புஷ்ப பல்லக்கு என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது.
புஷ்ப பல்லக்கு
புஷ்ப பல்லக்கு
Published on

ஆன்மிக சிறப்பு கொண்ட மாதமான சித்திரை மாதத்துடன் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய நிலையில், கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டி உள்ளன. இந்த மாதத்தில் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்பதால், இறைவனை குளிர்ச்சியாக்க பல்வேறு கோவில்களில் விதவிதமான வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

பல்வேறு சிவன் கோவில்களில் சிவலிங்கம் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில், சிவ லிங்கத்தின் மேல் துளையிடப்பட்ட ஒரு பாத்திரத்தில் இருந்து நீர் சொட்டு, சொட்டாக லிங்கத்தின் மீது விழும்படி செய்யப்படுகிறது. இந்த சிறப்பு வழிபாட்டு முறையானது தாராபிஷேகம் எனப்படுகிறது. இது சிவனின் உக்கிரத்தை குறைத்து குளிர்ச்சிப் படுத்துகிறது. மேலும் பல கோவில்களில் தெய்வங்களுக்கு இளநீர், மாம்பழங்களை குளிர்ச்சிக்காக படைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நகரங்களில் ஒன்றான வேலூரில் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று புஷ்ப பல்லக்கு என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது. வேலூரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ள தெய்வங்களை, புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் (தேர்) வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். இந்த விழா இறைவனை மலர்களால் குளிர்விக்க செய்யப்படும் வழிபாட்டு முறை என்கின்றனர் பக்தர்கள்.

இந்த திருவிழா பல ஆண்டுகளாக பாரம்பரியமாக வேலூரில் நடத்தப்பட்டு வருகிறது. இதனைக் காண ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வேலூருக்கு வருகை தருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com