திருக்கருகாவூர் சிவன் கோவிலில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம்

சுவாமி- அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு சகல சம்பிராதாயங்கள், ஆகம விதிகள்படி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோவில், திருக்கல்யாணம்
திருக்கல்யாண வைபவம்
Published on

மெலட்டூர்,

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சமேத முல்லைவனநாதர் திருக்கோயில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 21ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. வைகாசி உற்சவ விழாவில் தினசரி சுவாமி - அம்பாள் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பெண்கள் சீர்வரிசை

7-வது நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை சுவாமி முல்லைவனநாதருக்கும் அம்பாள் கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சுவாமி -அம்பாளுக்கு பெண்கள் சீர்வரிசை தட்டு, தாம்பூலம் எடுத்து கோவில் வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து சுவாமி- அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு சகல சம்பிராதாயங்கள், அக்னி ஹோமங்கள் வார்க்கப்பட்டு ஆகம விதிகள்படி சுவாமி -அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்தனர். ஜூன் 1ந்தேதி வரை திருவிழா நடைபெறும்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com