திருச்சானூர்: திருப்பதி தேவஸ்தான கோவில்களில் மே மாதம் நடக்கும் விழாக்கள்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மே 1-ந்தேதி காலை தங்கத்தேரோட்டம் நடைபெறும்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்
Published on

திருப்பதி.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் மற்றும் துணை கோவில்களில் மே மாத நடக்கும் விழாக்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மே 1, 15, 22, 29-ந்தேதி வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு திருச்சி உற்சவங்கள், 1-ந்தேதி காலை 9.30 மணிக்கு தங்கத்தேரோட்டம், 2-ந்தேதி வசந்தோற்சவம் நிறைவடைகிறது. 8-ந்தேதி மாலை 6.45 மணிக்கு கஜ வாகனம் நடக்கிறது.

சுந்தரராஜசாமி கோவிலில் 13-ந்தேதி இரவு 7 மணிக்கு திருச்சி உற்சவம் நடக்கிறது. பலராமகிருஷ்ணர் கோவிலில் மே 18-ந்தேதி இரவு 7 மணிக்கு திருச்சி உற்சவம் நடக்கிறது.

சூரியநாராயணசாமி கோவிலில் 27-ந்தேதி மாலை 5 மணிக்கு திருச்சி உற்சவம் நடக்கிறது. சீனிவாச சுவாமி கோவிலில் 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் காலை 8 மணிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் மே 1, 8, 15, 22, 29-ந்தேதி வெள்ளிக்கிழமைகளில் காலை 7 மணிக்கு வெள்ளிக்கிழமை சேவைகள் நடக்கின்றன. 5-ந்தேதி காலை 8 மணிக்கு அஷ்டதள பாதபத்மாராதனை, 9-ந்தேதி காலை 10.30 மணிக்கு கல்யாண உற்சவம், 13-ந்தேதி காலை 8 மணிக்கு அஷ்டோத்தர கலசாபிஷேகம் நடக்கிறது.

அதேபோல் பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலில் மே 3, 10, 17, 24, 31-ந்தேதிகளில் காலை 8.15 மணிக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com