மாறனேரி பதுவை அந்தோணியார் ஆலய தேர் பவனி

பதுவை அந்தோணியார், ஆரோக்கிய அன்னை உள்ளிட்ட ஐந்து சொரூபங்கள் தனித்தனி தேரில் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது.
தேர் பவனி
தேர் பவனி
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள மாறனேரி புனித பதுவை அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டதுடன், தேர் பவனி நடைபெற்றது. பதுவை அந்தோணியார், ஆரோக்கிய அன்னை உள்ளிட்ட ஐந்து சொரூபங்கள் தனித்தனி தேரில் வைக்கப்பட்டு, பேண்ட் வாத்திய இசை, கிராமிய இசை முழங்க புறப்பட்ட இந்த தேர் பவனி, மாறனேரியில் கிராம வீதிகள் வழியாக வந்தது. இன்று காலை திருவிழா திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com