நாளை திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
நாளை திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்
Published on

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன் னாலும் முக்தி அளிக்கிற தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆழித்தேர் பிரசித்தி பெற்றது. ஆசியாவி லேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. ஒவ்வொரு ஆண்டு பங் குனி உத்திர திருவிழாவில் ஆழித்தேரோட்டம் விழா நடைபெறுவது வழக் கம். ஆழி என்றால் கடல் போன்று பெரியது என்பதை குறிக்கிறது.

திருவாரூர் தேரழகு என்பது முதுமொழி. பங்குனி உத்திர திருவிழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம். அஜபா நடனத்துடன் கோவி லில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருளி 4 வீதிகளிலும் தேர் அசைந்து ஆடி திரும்பும் அழகை காண கண் கோடி வேண்டும் என்பர். ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்காலம் என்பது ஐதீகம்.

ஹைட்ராலிக் பிரேக் வசதி

அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் 30 அடி, அகலம் 30 அடியாகும். மரத்தேரின் எடை 220 டன். திருவாரூர் ஆழித்தேர் இதர கோவில்களின் தேர்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது. ஆழித்தேர் 24½ அடி நீளம், 1½ அடி உயரம் கொண்ட 2 இரும்பு அச்சுக்களில், 9 அடி விட்டமும், 1½ அடி அகலமும் உடைய 4 இரும்பு சக்கரங்கள் மேல் வர்ணிக்க இயலாத கலை பொக்கிஷமான சிறப்புகளுடன் தேர் அமைந்துள்ளது.

திருச்சி பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்க ளுடன் எளிதில் நிறுத்தும் வகையில் ஹைட்ராலிக் பிரேக் வசதிகள் செய் யப்பட்டுள்ளது.

நாளை ஆழித்தேரோட்டம்

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) இரவு அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருளுகிறார். ஆழித்தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.05 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அதனுடன் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடிக்கப்படும்.

முன்னதாக காலை 5.15 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கிறது. ஆழித்தேருடன் விநாயகர், சுப்பி ரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் அலங்கரிக்கும் பணி நிறைவு நிலையை அடைந்துள்ளது. பிரமாண்ட ஆழித்தேரை பக்தர்கள் கண்டு ரசித்து, செல்போன் மூலம் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

தேரோட்ட விழாவையொட்டி சன்னதி தெரு உள்ளிட்ட கோவிலின் 4 திசைகளிலும் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளுக் கும் தேவையான பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தை காண வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள், சிவனடியார்கள் திருவாரூருக்கு வருகை புரிந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com