

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மேலப்புதுக்குடியில், தேரிக்காட்டின் நடுவே 700 ஆண்டுகள் பழமையான அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டு இந்த கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
அதிகாலை மகா கணபதி ஹோமம் நடைபெற்றதைத் தொடர்ந்து காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற உள்ளது.