கருட சேவையின் மகத்துவம்

கருட வாகனத்தில் பெருமாளை தரிசனம் செய்வது, வேதங்கள் உணர்த்தும் பரம்பொருளைத் தரிசிப்பதாக கருதப்படுகிறது.
கருட சேவை
கருட சேவை
Published on

வைணவக் கோவில்களில், பிரம்மோற்சவம் போன்ற முக்கிய திருவிழாக்களின்போது, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்வானது ‘கருட சேவை’ ஆகும். இது வைணவத்தில் மிக உயர்ந்த தரிசனமாகக் கருதப்படுகிறது. மகத்துவம் வாய்ந்த இந்த சேவையானது இது செல்வத்தையும், மோட்சத்தையும் அளிக்கும் என்று நம்பப்படுகிறது. கருட வாகனத்தில் பெருமாளைத் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது வைணவர்களின் நம்பிக்கை.

கருட சேவை அன்று பெருமாளிடம் பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அல்லது வேண்டுதல்களை பெருமாளை சுமந்து செல்லும்போது கருடன், பெருமாளிடம் கூறுவார் என்பது நம்பிக்கை. எனவே, பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா வரும்போது தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

கருட வாகனம் 'பெரிய திருவடி' என்றும் அழைக்கப்படுகிறது. கருட வாகனத்தில் பெருமாளை தரிசனம் செய்வது, வேதங்கள் உணர்த்தும் பரம்பொருளைத் தரிசிப்பதாக கருதப்படுகிறது. கருடன் வேதங்களின் வடிவமாக கருதப்படுவதால், கருட சேவையின்போது பெருமாளை தரிசிப்பது, வேதங்களின் சாராம்சத்தை உணர்வதற்கு சமம்.

பல வாகனங்களில் பெருமாள் எழுந்தருளினாலும், கருட வாகன சேவை மிகவும் உயர்ந்த மற்றும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கோவிலுக்குள் வர இயலாத முதியவர்கள், நோயுற்றவர்கள் போன்றோருக்காக இறைவன் கருணையுடன் வீதிக்கு எழுந்தருள்வதாகவும் கருதப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com