ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா இன்று தொடக்கம்

விழா வருகிற 20-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் உற்சவர் ெரங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவத்துடன் தொடங்குகிறது. இந்த விழா வருகிற 20-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
இதில் பகல் பத்து உற்சவம் ஐந்து நாட்களும், இராப்பத்து உற்சவம் ஐந்து நாட்களும் நடைபெறும். இன்று முதல் ெரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான 2000 திருமொழி பாசுரங்களை ஐந்து நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுவார். ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழி திருநாள் வரும் 15-ந் தேதி தொடங்கி 19-ந்் தேதி வரை நடைபெறுகிறது. 20-ந் தேதி இயற்பாச்சாற்று முறை நடைபெறும்.






