ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், ஒழுகைமங்கலத்தில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேரோட்டம்
தேரோட்டம்
Published on

தரங்கம்பாடி,

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பொறையார் அருகே ஒழுகைமங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு பங்குனித் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 29ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

நேற்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சீதளா பரமேஸ்வரி அம்மன் தேரில் எழுந்தருளியதும், தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்து சன்னதி நிலையை அடைந்தது. வீதியின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

வருகிற 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. 12 ந்தேதி உதிரவாய் துடைப்பு உற்சவம், 19ந்தேதி மஞ்சள் நீர் உற்சவம், 28ந்தேதி‌ விடையாற்றி உற்சவம் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com