திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் தேரோட்டம்

ராஜ அலங்காரத்தில் தேவியருடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிடந்தை தேரோட்டம்
திருவிடந்தை தேரோட்டம்
Published on

மாமல்லபுரம்,

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், கடந்த 1-ந்தேதி துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், சிறப்பு உற்சவங்கள், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய உற்சவமான கருட சேவை நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிலையில் பிரம்மோற்சவ விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் தேவியருடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் மாமல்லபுரம், கோவளம், திருப்போரூர் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். 10-ந்தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com