

திருச்செந்தூர்,
முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வார விடுமுறை தினம் மற்றும் வளர்பிறை சஷ்டியை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. கடலில் குளித்து மகிழும் பக்தர்கள் பின்னர் நீண்ட வரிசையில் நின்று சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.