

திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து, உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை எண்ணுவதற்காக அறநிலையத்துறை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, திருத்தணி முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில், இணை கமிஷனர் ரமணி முன்னிலையில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதில் 11 நாட்களுக்கான உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 2 லட்சத்து 78 ஆயிரத்து 837 கிடைத்தது. மேலும், திருப்பணி உண்டியல் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 553 கிடைத்தது. இரண்டையும் சேர்த்து மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 54 ஆயிரத்து 389 ரொக்கம் காணிக்கையாக கிடைத்தது. அதேபோல், 293 கிராம் தங்கம் மற்றும் 7 கிலோ 153 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.