திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது


திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
x
தினத்தந்தி 21 Oct 2025 11:05 AM IST (Updated: 21 Oct 2025 11:08 AM IST)
t-max-icont-min-icon

இரண்டாம் நாள் திருவிழா முதல் 10-ம் நாள் திருவிழா வரை தினமும் கதகளி நடைபெறும்.

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் இந்த வருட ஐப்பசி மாத திருவிழா இன்று துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று காலை 8.45 மணி முதல் 9.45 மணிக்குள் தந்திரி கோகுல் நாராயணரு தலைமையில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தின் போது சிறப்பு பஞ்சவாத்தியம் இசைக்கப்பட்டது. கொடியேற்று நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழா நாட்களில் தினமும் இரவு 9.30 மணிக்கு வாகன பவனி நடைபெறும். 2-ம் திருவிழா முதல் 10-ம் திருவிழா வரை தினமும் கதகளி நடைபெறும். 5, 6, 7-ம் திருவிழா நாட்களில் தினமும் காலை 9 மணி முதல் 2 மணி வரை சிறப்பு உற்சவ பலி தரிசனம் நடைபெறும்.9-ம் திருவிழா நாளில் இரவு 9.30 மணிக்கு சாமி கருட வாகனத்தில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். 10-ம் திருவிழா இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு சுவாமி எழுந்தருளல் நடைபெறும்.10 நாள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன்குமார் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story