குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜையில் 201 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் திருக்கோவிலும் ஒன்றாகும். இங்கு மாதம்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறும். அவ்வகையில் இந்த மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணியளவில் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 201 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com