

பரமத்தி வேலூர்,
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பேட்டையில் உள்ள புது மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை லலிதா ரஹஸ்ய சகஸ்ர நாம லட்சார்ச்சனை நடைபெற்றது.
17ஆம் தேதி காலை 7 மணிக்கு 108 கலச பூஜையும், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 11 மணிக்கு மகா ஆராதனை, தீபா ஆராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு திரிசதி அர்ச்சனையும் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.
நேற்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை மகாலட்சுமி அம்சமான வலம்புரி மற்றும் மகாவிஷ்ணு அம்சமான இடம்புரி சங்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சப்தசதி பாராயணம் நடைபெற்றது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கணபதி பூஜை, தீப பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சண்டிகா பரமேஸ்வரி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மதியம் மகா தீபாராதனை, சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை, படுக பூஜையும் நடைபெறுகிறது.