திருவோண நட்சத்திர தினம்.. மோகனூர் பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திருவோண நட்சத்திர தினம்.. மோகனூர் பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
Published on

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பெருமாள் ஆலயத்தில் திருவோண நட்சத்திர தினத்தை முன்னிட்டு திருக்கோவிலில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பல்வேறு மலர்கள் மற்றும் துளசி மாலையால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த சிறப்பு பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு துளசி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com