திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள்

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்காது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள்
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடக்கின்றன. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரம்மோற்சவ விழாக்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடக்கின்றன. அதில் வருகிற செப்டம்பர் மாதம் 15 முதல் 23-ந்தேதி வரை 9 நாட்கள் 'சாலகட்ல' எனப்படும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதன்பிறகு அக்டோபர் மாதம் 12 முதல் 20-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று வாகனச் சேவை மற்றும் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதை குறைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்காது

வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம், 15-ந்தேதி கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடக் கின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக செப்டம்பர் 19-ந்தேதி இரவு கருட சேவை, 22-ந்தேதி தேரோட்டம், 23-ந்தேதி சக்கர ஸ்நானம் எனப் படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்காது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அக்டோபர் மாதம் 16-ந்தேதி கருட சேவை, 17-ந்தேதி புஷ்பக வாகன வீதிஉலா, 19-ந்தேதி தங்கத்தேரோட் டம், 20-ந்தேதி காலை சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த் தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com