நெல்லை டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

திருவிழாவில் தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழா கொடியேற்றம்
திருவிழா கொடியேற்றம்
Published on

நெல்லை,

நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆனி தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நெல்லையப்பர் கோவிலின் உபகோவிலும், ஊர் காவல் தெய்வமுமான டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெறும்.

இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டது. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

கொடி பட்டம் ரத வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோவில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 25-ந் தேதி பிட்டாபுரத்தி அம்மன், நெல்லையப்பர் கோவிலுக்கு தேரில் எழுந்தருளும் வைபவம், 26-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

இந்த திருவிழாவைத் தொடர்ந்து ஜூன் மாதம் 2-ந் தேதி காலை 7.30 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் பிள்ளையார் கொடியேற்றம் நடக்கிறது. 20-ந் தேதி காலை 6.30 மணிக்கு ஆனி தேர் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com