

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் உற்சவங்களின்போது நடைபெறும் வாகன சேவைகளில் கருட வாகன சேவை மிகவும் முக்கியமானது. தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதேபோன்று ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று கருட சேவை நடைபெறும்.
கருட சேவையில் பெருமாளை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், அந்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். கருட சேவை அன்று பெருமாளிடம் பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அல்லது வேண்டுதல்களை பெருமாளை சுமந்து செல்லும்போது கருடன், பெருமாளிடம் கூறுவார் என்பது நம்பிக்கை. எனவே, கருட வாகன சேவையையும் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் கூடுவார்கள்.
அவ்வகையில், 2026ஆம் ஆண்டுக்கான பௌர்ணமி கருட சேவைகள் குறித்த விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சில முக்கியமான பண்டிகைகள் மற்றும் நிகழ்வுகளின்போது மட்டும் பௌர்ணமி கருட சேவை ரத்து செய்யப்படும். அதன்படி இந்த ஆண்டு எந்த தேதியில் பௌர்ணமி கருட சேவை நடைபெறும், எந்த தேதிகளில் ரத்து செய்யப்படும் என்ற அட்டவணையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
* மே 1 (வெள்ளிக்கிழமை).
* மே 31 (ஞாயிற்றுக்கிழமை).
* ஜூன் 29 (திங்கட்கிழமை).
* ஜூலை 29 (புதன்கிழமை).
* ஆகஸ்ட் 28 (வெள்ளிக்கிழமை).
* செப்டம்பர் 26 (சனிக்கிழமை).
* அக்டோபர் 26 (திங்கட்கிழமை).
* நவம்பர் 24 (செவ்வாய்க்கிழமை) - கார்த்திகை தீபத்திருவிழா
* டிசம்பர் 24 (வியாழக்கிழமை) - அத்யாயனோத்ஸவம்
பக்தர்கள் இந்த தகவலை கவனத்தில் கொண்டு, திருப்பதி பயணத்தை திட்டமிடலாம்.