திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா.. 14-ம் தேதி கொடியேற்றம்

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக 20-ம் தேதி காலையில் ரத உற்சவம் நடைபெறும்.
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில்
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனிமாத பிரம்மோற்சவ விழா வரும் 13ம் தேதி விக்னேஸ்வரர் உற்சவத்துடன் தொடங்குகிறது. 14ம் தேதி காலை 6.30 மணி அளவில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் காலை, மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். சிறப்பு உற்சவங்களும் விமரிசையாக நடைபெறும்.

Also Read
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் தெப்ப உற்சவம்
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில்

முக்கிய நிகழ்ச்சியாக 18ம் தேதி மாலை ரிஷப வாகன வீதியுலா மற்றும் பஞ்சமூர்த்தி தரிசனம் நடைபெறும். 20-ம் தேதி காலையில் ரத உற்சவம் நடைபெறும். 21ஆம் தேதி இரவு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்தீஸ்வரர் திருக்கல்யாணம், 23-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ரா.ரவி குருக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Also Read
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா: நாளை ஒடுக்கு பூஜை
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில்
X

Daily Thanthi
www.dailythanthi.com