உடன்குடி சிவலூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா- பால்குட ஊர்வலம்

நாளை காலை முளைப்பாரி வைத்து கும்மியடித்து அம்மனை வழிபடுகின்றனர்.
உடன்குடி சிவலூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா- பால்குட ஊர்வலம்
Published on

உடன்குடி சிவலூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா விமரிசையாக நடைபெற்றுவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. மாலை 4 மணிக்கு உடன்குடி கண்டுகொண்ட விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குடம் பவனி நடந்தது. இரவு 8 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை கும்பம் திருவீதி உலா நடந்தது.

இன்று (செப்டம்பர் 9) காலை 10 மணிக்கு வில்லிசை நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, கும்பம் திருவீதி உலா, இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை, முளைப்பாரி எடுத்தல் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடைபெறும்.

நாளை (செப்டம்பர் 10) காலை முளைப்பாரி வைத்து கும்மியடித்து அம்மனை வழிபடுகின்றனர். காலை 10 மணி, இரவு 10 மணிக்கு வில்லிசை, மதியம் 1 மணிக்கு தீபாராதனை கும்பம் திருவீதி உலா நடக்கிறது. மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, கும்பம் திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை மறுநாள் (செப்டம்பர் 11) காலை 10 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜையைத் தொடர்ந்து வரி பிரசாதம் வழங்கப்படும். மாலை 7 மணிக்கு திரைப்பட கச்சேரி நடக்கிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com