உடையப்பன் குடியிருப்பு நாராயணசுவாமி கோவில் தேர்த் திருவிழா தொடங்கியது

திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை அய்யா வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் காலை 4.30 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும் நடைபெற்றது. 5.30 மணிக்கு தமிழ் வாத்தியங்கள் இசைக்க, செண்டை மேளம் அதிர் வேட்டுகள் முழங்க திருக்கொடி ஏற்றப்பட்டது.
திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் ஊர் தலைவர், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு அய்யா வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 6.30 மணிக்கு மாபெரும் அன்னதர்மமும், இரவு 8.30 மணிக்கு அய்யாவின் அருளிசைப் புலவர் சிவச்சந்திரன் வழங்கும் மாபெரும் அய்யாவழி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.
Related Tags :
Next Story






