வைகாசி விசாகம் பிரம்மோற்சவம்: வடபழனி முருகன் கோவிலில் இன்று கொடியேற்றம்

வடபழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
வைகாசி விசாகம் பிரம்மோற்சவம்: வடபழனி முருகன் கோவிலில் இன்று கொடியேற்றம்
Published on

சென்னை,

சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக பிரமோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று (வியாழக்கிழமை) காலை 7.35 மணிக்கு நடக்கிறது.

தொடர்ந்து, வருகிற 27-ந்தேதி காலை 7.05 மணிக்க மேல் 7.25 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 30-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் தீர்த்தவாரி கலசாபிஷேகமும், மாலை 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று இரவு மயில் வாகனத்தில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் கொடியிறக்கமும் நடக்கிறது.

இதையடுத்து 31-ந்தேதி இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கில் சாமி புறப்பாடும் நடக்கிறது. வைகாசி விசாக உற்சவத்தையொட்டி தினசரி காலை மற்றும் இரவு நேரங்களில் சூழிய பிரபை, சந்திரபிரபை, மங்களகிரி விமானம், ஆட்டுக்கிடா, யானை, குதிரை, உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்பாடு நடக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com