கோத்தகிரி வராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை

பஞ்சமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வராஹி அம்மனை வழிபட்டனர்.
சிறப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன்
சிறப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன்
Published on

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிங்டனில் உள்ள வராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அவ்வகையில் மாசி மாத வளர்பிறை பஞ்சமி திதி நாளான நேற்று மாலை கோத்தகிரி டானிங்டன் வராஹி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலிலும் வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

வராஹி அம்மனை வழிபட வளர்பிறை பஞ்சமி திதி மிக உகந்த நாளாகும். இந்த நாளில் வராஹியை மனதார வழிபட்டால், கேட்ட வரங்கள் கிடைக்கும், பகை, எதிர்ப்பு, தடை, பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சினைகள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

Also Read
ஞானம் வழங்கும் வசந்த பஞ்சமி வழிபாடு
சிறப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன்
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com