

தர்மபுரி,
வளர்பிறை பஞ்சமியையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஷ்ட வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு கணபதி பூஜை, வராகி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ அஷ்ட வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தர்மபுரி அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டபுஜ வராகி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோன்று தர்மபுரி அருகே இலக்கியம்பட்டி அழகாபுரியில் 21 அடி உயர ஸ்ரீ சிம்மஹாரூட வராகி அம்மன் சிலையுடன் அமைந்துள்ள கோவிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தர்மபுரி அருகே மொடக்கேரி கிராமத்தில் அமைந்துள்ள 16 அடி உயரமுள்ள மகாகாளி வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.