

தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் இன்று வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. யாகசாலை பூஜை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் யாகசாலையில் இருந்து புனித நீர் கலசம் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு கோபுரத்தை அடைந்தது.
பகல் 12 மணிக்கு கோவில் விமானம் மற்றும் முத்துமாலை அம்மன், விநாயகர், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மதியம் ஒரு மணி அளவில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு முத்துமாலை அம்மனை வழிபட்டனர்.