தோரணமலை முருகன் கோவிலில் வேல் பூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்பு


தோரணமலை முருகன் கோவிலில் வேல் பூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்பு
x

உற்சவர் சிலையை சுற்றிலும் வேல்களை அடுக்கி வைத்து வேல் பூஜை நடைபெற்றது.

தென்காசி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களும், முனிவர்களும் வழிபட்ட பழமையும் பெருமையும் உடையதாகும்.

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி அன்று மலை மீது உள்ள சுனையில் இருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு வந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல இன்று ஆவணி மாத கடைசி வெள்ளி மற்றும் கார்த்திகை சிறப்பு பூஜைக்காக உற்சவர் சிலையை சுற்றிலும் வேல்களை அடுக்கி வைத்து வேல் பூஜை நடைபெற்றது.

தோரணமலை பெண் பக்தர்கள் சார்பில் வேல்மாறல் எனும் மந்திரம் கூறி வேல் வழிபாடு செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

1 More update

Next Story