வேலாயுதம்பாளையம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கார்த்திகை மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாத முதல் செவ்வாய்கிழமையை முன்னிட்டு சுப்பிரமணியர் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கார்த்திகை மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com