வேலாயுதம்பாளையம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி
சிறப்பு அலங்காரத்தில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி
Published on

கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் வேலாயுதம்பாளையம், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் தை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com