வேலாயுதம்பாளையம்: சிவன் கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு

சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நன்செய் புகளூர் சிவன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர்
நன்செய் புகளூர் சிவன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர்
Published on

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் தை மாத அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பாகவல்லி அம்பிகை, மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவில், புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாயகி உடனுறை புன்னைவன நாதர் கோவிலில் உள்ள காலபைரவர், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com