செங்கோட்டை அருகே விலாசம் கணபதி கோவில் கும்பாபிஷேகம்


செங்கோட்டை அருகே விலாசம் கணபதி கோவில் கும்பாபிஷேகம்
x

திருமலைக்குமார சுவாமி திருக்கோவில் உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தென்காசி

செங்கோட்டை அடுத்துள்ள பண்பொழி பகுதியில் திருமலை குமாரசுவாமி திருக்கோவிலின் உபக்கோவிலான விலாசம் கணபதி திருக்கோவில் உள்ளது. திருமலைக்கோவில் அருகே உள்ள வண்டாடும் பொட்டல் பகுதியில் உள்ள இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை தொடங்கியது.

யாகசாலை பூஜைகளுக்கு பிறகு புனித நீரானது கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவில் உதவி ஆணையர் கோமதி முன்னிலையில் நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேக நிகழ்வில், அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பண்பொழி இசக்கி, பாப்பா, கணேசன், தலைமை எழுத்தர் லட்சுமணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் செங்கோட்டை, பண்பொழி பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story