

திருவள்ளூரின் கிராம தேவதை வேம்புலி அம்மன் கோவில். இக்கோயிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி வேம்புலி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
இதற்காக திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் இருந்து 108 பெண்கள் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக வேம்புலி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அந்த பால் குடங்களில் இருந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.