

சென்னை,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உபகோவிலான மாரியம்மன் கோவில் மாசி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்குகிறது.
வருகிற 10-ம் தேதி அரிவாள் எடுத்துக் கொடுத்தலும், திருக்கம்பம் அலங்கரித்தல், கம்பம் சாட்டுதலும் நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், பூவோடு வைத்தல் வருகிற 17-ம் தேதி மாலை நடைபெறும்.
கொடியேற்றம் தொடங்கியது முதல் 10 நாள்களுக்கும் மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா எழுந்தருள்வாா். 24-ம் தேதி திருக்கல்யாணமும், 25-ம் தேதி திருத்தோ் வடம்பிடித்தலும் நடைபெறும். தேரோட்டத்தை தொடா்ந்து அம்மன் வண்டிக்கால் பாா்த்தல், வாண வேடிக்கை நடைபெறும்